பாலக்கோட்டில் பேரூர் திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 செப்டம்பர், 2024

பாலக்கோட்டில் பேரூர் திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு  தனியார்  கூட்ட அரங்கில் பாலக்கோடு  திமுக பேரூர் சார்பில் செயல்வீரர்கள் மற்றும்  பொது உறுப்பினர்கள் கூட்டம் மத்திய பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி  தலைமையில்   நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் இதாயத்துல்லா, அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய கழக செயலாளர்கள் முனியப்பன், வக்கில் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் தூள் செட்டி ஏரிக்கு விரைவாக  தண்ணீர் கொண்டு வர வேண்டும் எனவும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெறுவதற்காக கழகத்தினர் அனைவரும் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதனை தொடர்ந்து  மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தல்  குறித்து நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.


பின்னர் அவர் பேசுகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும், பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமைக் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கிராம நகர் புற வளர்ச்சிக்கான  நதிட்டங்கள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை  செயல்படுத்தி வருகிறார் என பேசியவர்,


வருகின்ற உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவர்கள்   பெருவாரியான வாக்குகளை பெற்று  வெற்றி பெற வைக்க வேண்டும்  என கேட்டுக் கொண்டார்.


இக்கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதிகள் மோகன்,  செந்தில், அமீர்ஜான், பெரியசாமி, இலியாஷ், வாகாப்ஜான், அன்வர்பாஷா, துரை, கணேசன், சரவணன்,  கிளைக்கழக செயலாளர்கள்,  சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad