பாலக்கோடு காவல் நிலையம் அருகில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 செப்டம்பர், 2024

பாலக்கோடு காவல் நிலையம் அருகில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவல்  நிலையம் முன்பு, மாவட்ட அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து   பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மா.முருகன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பட்டு அஜிசுல்லா, ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றத்தை  தொடர்ந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதனை கொண்டாடும் வகையில்  திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும்  இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.


இந் நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அமீர்ஜான், ஒன்றிய பிரதிநிதி அன்வர், கிளை செயலாளர்கள் சிவக்குமார்பிரியா, சுப்ரமணி, முன்னாள் சிறுபான்மை அணி துணைத் தலைவர் ஆசிப், விஜயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad