தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நேற்றிரவு தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று காலை முதலே திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திமுக பேரூர் கழகம் சார்பில் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பேரூராட்சி தலைவர், பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி தலைமையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக