பாலக்கோடு சுற்று வட்டார ஏரிகளின் நீர்வளம் மற்றும் மண் வளம் காக்க. நெடுஞ்சாலை துறை சார்பில் 5 இலட்சம் பனை விதைகள் நடும் பணி துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

பாலக்கோடு சுற்று வட்டார ஏரிகளின் நீர்வளம் மற்றும் மண் வளம் காக்க. நெடுஞ்சாலை துறை சார்பில் 5 இலட்சம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்.


பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருள்களாக விளங்குகின்றன.பனை ஓலைகள் கூரை வேயவும், பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும், முதிர்ந்த பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்யப் பயன்படுகின்றன. 

பல்வேறு பயன்களைத் தரும் பனையானது தமிழ்நாட்டின் மாநில மரமாக விளங்குகிறது. 100 அடி உயரம் வளர்ந்து 100 ஆண்டு காலம் வாழும் தன்மையுடைய இம்மரமானது, சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது.வறண்ட சூழலிலும், ஈரப்பதம் மிகுந்த சூழலிலும் நன்கு வளரும் தன்மைபெற்றது. 


3 முதல் 6 மீட்டர் இடைவெளியில் 2 அடி ஆழம் குழிகளைத் தோண்டி, அதில் குழி ஒன்றுக்கு 10 கிலோ மக்கிய தொழு உரம், மணல் கொண்டு நிரப்பி, இதில் வளமான விதைகளை 10 செ.மீ. ஆழத்தில் நடவு செய்தால் நன்கு செழித்து வளர்ந்து மண் வளத்தையும், நீர் வளத்தையும் காக்கும் தன்மை உடைய பனை விதைகளை தமிழக அரசு அனைத்து ஏரிகள் மற்றும் சாலையோரங்களில் நடவு செய்ய உத்தரவிட்டது.


அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி  பாலக்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இராமியம்பட்டி ஏரி, புலிக்கரை, சுண்ணாம்பட்டி, நிம்மாங்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் பனை விதைகள் நடும்பணியை உதவி கோட்டபொறியாளர் மங்கையர்கரசி அவர்கள் இராமியம்பட்டி ஏரிக்கரையில் பனை விதை நட்டு துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில்  நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஞ்சித், சாலை ஆய்வாளர்கள்  மற்றும்  பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad