தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள்ā கரைப்பதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள நீர் நிலைகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள்ā கரைப்பதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள நீர் நிலைகள்.


விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது.  ஆனால்,  அண்மைக்காலமாக ஜிப்சம் (Plaster of Paris) இராசயனத்தால் செய்யப்பட்டு, இரசாயண வர்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை வழிபட்ட பின்னர், அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.  எனவே, சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற பொதுமக்கள் கேட்டக்கொள்ளப்படுகிறார்கள்.

  • களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும். அத்தகைய சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்கலாம்.
  • இராசயனக் கலவையற்ற (Plaster of Paris /Gypsum -அல்லாத) சிலைகள் மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
  • செயற்கை இரசாயன வர்ணப் பூச்சுகள் (Paint) பூசப்பட்ட சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • தருமபுரி மாவட்டத்தில் சிலைகள் கரைப்பதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள நீர் நிலைகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  அங்கு 07.09.2024, 09.09.2024, மற்றும் 13.09.2024 ஆகிய தேதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் சிலைகள் கரைக்க வேண்டும்.
  1.  ஒகேனக்கல் (பென்னாகரம் வட்டம்)
  2. கொலசனஅள்ளி ஏரி. (பாலக்கோடு வட்டம்)
  3. கேசர்குளி அணை. (பாலக்கோடு வட்டம்)
  4. தும்பலஅள்ளி அணை. (காரிமங்கலம் வட்டம்)
  5. தொப்பையார் அணை. (நல்லம்பள்ளி வட்டம்)              
  6. நாகாவதி அணை. (நல்லம்பள்ளி வட்டம்)
  7. நாகமரை - ஏரியூர் (பென்னாகரம் வட்டம்)
  8. இருமத்தூர், டி.அம்மாப்பேட்டை (தென்பெண்ணை ஆறு).
  9. ஈச்சம்பாடி அணை. (பாலக்கோடு வட்டம்)
  10. சின்னார் அணை (பாலக்கோடு வட்டம்)
  11. வாணியாறு அணை (பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்)
  • பொது இடங்களில் சிலைகள் அமைக்க முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து உரிய முறையில் தேவையான சான்றுகளுடன் விண்ணப்பம் அளித்து  அனுமதி பெற வேண்டும்.
  • பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச் சூழலை பாதிக்காமலும், நீர்நிலைகளை மாசுபடுத்தாமலும், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும்படியும், மாவட்ட நிர்வாகத்திற்கு தக்க ஒத்துழைப்பு நல்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
  • அனுமதியின்றி சிலைகள் பொது இடங்களில் அமைக்கப்பட்டால் தொடர்புடைய நபாகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • சிலை அமைக்க அனுமதி பெற்றவர்கள் உரிய நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad