தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஊட்டமலை காவிரி கரையோரங்களில் பனை விதை நடும் பணிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி ஒரு கோடி பனை விதைகளை நடும் நெடும் பணியின் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 25000 பனை விதைகளை நடும் பணியினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய மரத்தின் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத் பனை தலைமுறையினருக்கு பனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களுக்கும் சமூக வாழ்வியலுக்கும் பனையின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரமும் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக