ஒகேனக்கல்லில் இருந்து பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் பணியை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கிவைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

ஒகேனக்கல்லில் இருந்து பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் பணியை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கிவைத்தார்.


ஒகேனக்கல்லில் இருந்து பூம்புகார் வரை 416 கிலோ மீட்டர் தூரம்  காவிரி கரையோரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் பணியை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கிவைத்தார்.

தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் விளங்குகிறது. தமிழா்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய இந்த மரம் பரமாரிப்பில்லாமலே உள்ளது. காலத்துக்கும் பயன் அளிக்கும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனையின் சிறப்பைக் கொண்டு செல்லவும் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை நடு நெடும்பனியானது இன்று முதல் துவங்கியுள்ளது.


தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், தருமபுரி மாவட்ட நிருவாகம் இணைந்து ஒருங்கிணைந்து காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி நடைபெற்று வருகிறது. 


38 மாவட்டங்களைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட அமைப்புகள், 12,525 ஊராட்சிகள், 1,00,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டு ஒரு கோடி பனை விதைகளை நடுகின்றனர். இந்தப் பணியை ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். காமெடி ஆக்டர் அறந்தாங்கி நிஷா உள்ளே தன்னார்வலர்கள் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.


மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள், பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு பனை விதைகளை நடுகின்றனர். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கும் இந்த பணியானது சேலம், ஈரோடு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பூம்புகார் வரை சுமார் 416 கிலோ மீட்டர் தூரம் காவிரி கரையோர பகுதியில் பனை விதைகள் நடும் பணி நடைபெறுகிறது. 


மேலும் இந்த பணியில் ஈடுபடும் நபர்கள் உதவி என்ற மொபைல் ஆப் மூலம் பதிவு செய்து கொண்டு இந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என பனை விதை நடும் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad