அக்டோபர் நான்காம் தேதி ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்ற கோரி கடையடைப்பு நடத்துவதாக பாமக கூறியிருந்த நிலையில் அதற்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி பாமக ஒரு நாடகம் போட்டுக் கொண்டிருக்கும் டிராமா கம்பெனி என்றும், நான்கு எம்எல்ஏக்கலை வைத்துக் கொண்டு இந்த நாட்டை ஆள முடியுமா, அல்லது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்றும், மக்கள் சிந்தித்துப் பார்த்தால் அடுத்த முறை பூஜ்ஜியம் என்றும், அவர்கள் அமைச்சராக இருக்கிறார்களா அல்லது முதலமைச்சராக இருக்கிறார்களா என்றும், மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்றும் தேர்தல் நேரங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பாமகவை இனிமேல் நம்பதேவையில்லை என சாடினார்.
மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 2026 க்குள் தமிழக முதலமைச்சர் நிறைவேற்றுவார் இதேபோல் ஏரிகளுக்கு உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றித் தர அமைச்சர்களிடம் கூறியுள்ளோம் அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர்கள் மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை ராட்சச குழாய்கள் மூலம் ஏரிக்கு நிரப்பப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்தார்.
பாமக திட்டமிட்டபடி வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி ஒருவர் கூட கடைகளை அடைக்க மாட்டார்கள் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் பாமகவை விமர்சனம் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக