தருமபுரி மாவட்டம் அருரில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகின்ற 04.10.2024 அன்று நடைபெறுகின்ற அரை நாள் கடையடைப்பு போராட்டத்தினை பற்றி ஆலோசனைக் கூட்டம் அரூர் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாநில உழவர் பேரியக்க செயலாளர் இலா. வேலுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் இரா.அரசாங்கம், மாவட்டத் தலைவர் அல்லி முத்து, மாநில இளைஞர் அணி செயலாளர் பி.வி செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் திருவேங்கடம், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ பி பி பழனிசாமி, நகர செயலாளர் பேக்கரி பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சேகர், கமல்ஹாசன், கோவிந்தன், சிவகுமார், ஒன்றிய தலைவர்கள் சிங்காரம் ராஜாமணி குமரேசன் பழனி, இளைஞர் சங்க மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், ஊடகப் பேரவை வெங்கடேசன் மணிகண்டன், மாவட்ட பொறுப்பாளர்கள் கோன்றி மாதவன் பெரியசாமி, மகளிர் சங்க பொறுப்பாளர்கள் முருகம்மாள் தவமணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக