தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியினர் நல இயக்குநர் திரு.எஸ்.அண்ணாதுரை ம.தொ.ப அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியினர் நல இயக்குநர் திரு.எஸ்.அண்ணாதுரை ம.தொ.ப அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை (05.09.2024) அன்று வழங்கினார்.
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, EMRS பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஆசிரியர் தினவிழா, கலைக்கழக மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகனை பார்வையிட்டனர்.
அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளி சித்தேரி 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதித்தின் பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் அறிவிப்பில் தருமபுரி மாவட்டம், சித்தேரி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியானது மாதிரி மேல்நிலைப்பள்ளியாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 180 மாணவர்கள், கூடுதலாக சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 05.09.2024 அன்று ஆசிரியர் தினவிழா, கலைக்கழக மற்றும் விளையாட்டு விழா, சிறப்பாக பணிப்புரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது. மேலும், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு பொது தேர்வு தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் அவர்கள் தலைமையில் மீளாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி அரசு உயர்நிலைப்பள்ளி முதல் சித்தேரி புதைகுழி கிரவுனாட் சாலை வரை ரூ.13.10 இலட்சம் மதிப்பில் இரண்டு அடுக்கு தார்சாலை அமைக்கும் பணி முடிவுற்றதையும், பெரேரி கிராமத்தில் பொது நிதி 2023-2024 திட்டத்தின் கீழ் ரூ.8.50 இலட்சம் தானியக்களம் அமைக்கும் பணி முடிவுற்றதையும், 15-வது பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.20.54 இலட்சம் மதிப்பிட்டில் புதிய நீர்தேக்க தொட்டி மற்றும் பைப்லைகள் அமைக்கும் பணிகளையும் என மொத்தம் 42.14 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதி சந்திரா, பழங்குடியின நல திட்ட அலுவலர் திரு.பெ.ச.கண்ணன், சேலம் மாவட்ட பழங்குடியின நல திட்ட அலுவலர் திருமதி. P.சுகந்தி பரிமளம், உதவி இயக்குநர் (கல்வி) திரு.A.குமரகுருபரன், உதவி இயக்குநர் (கல்வி) திரு.K.வைரமணி (ஓய்வு), சித்தேரி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.கா.லோகநாதன், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கோவிந்தம்மாள் சண்முகம், பள்ளி மேலான்மைக்குழு தலைவர் திரு.அன்னப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக