தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் வாழை தோட்டம் கிராமம் ஜோடிசுனை அருகே சிறுத்தை புலிகளின் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினமும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருக்கும் நாய்களையும் சேவல் கோழிகளையும் குறி வைத்து வேட்டையாடி வருகிறது, விநாயகம் என்பவரின் வீட்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கோழி சேவல்களையும், நான்கு நாய்களையும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் வேட்டையாடி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 10:30 மணி அளவில் வீட்டில் வளர்த்து வந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது, மேலும் மாது என்பவரின் வீட்டில் வளர்த்து வந்த மூன்று நாய்களையும் 15க்கும் மேற்பட்ட கோழிகளையும் வேட்டையாடி உள்ளது. இந்த வழியாகத்தான் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். உயிர் பலி ஏற்படுவதற்குள் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து சிறுத்தை புலியை பிடிக்க வேண்டும் என வாழைத் தோட்டம், ஜொடிசுனை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக