கோவிலூர் கிராமத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஸ்ரீகுந்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில்- பக்தர்கள் சாமி தரிசனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 செப்டம்பர், 2024

கோவிலூர் கிராமத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஸ்ரீகுந்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில்- பக்தர்கள் சாமி தரிசனம்.


தருமபுரி மாவட்டம் புலிகரை அருகே கோவிலூரில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீ குந்திஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் 5சனிக்கிழமைகளிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பாடு நடத்துவது வழக்கம்.


இதையடுத்து இன்று  அதிகாலை முதலே சாமிக்கு பால் இளநீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் மற்றும் ஆராதனையும் அதனை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ குந்தியம்மனுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது .


பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என சாமி தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad