பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 செப்டம்பர், 2024

பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் துணை தலைவர் ஜெய்சங்கர், இணைச்செயலாளர்கள் சரவணன், குமார், துணை தலைவர் மாது, மாவட்ட துணை தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞருக்கான வேலைவாய்ப்பு பறிபோகும். 


சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணையம் வழங்க வேண்டும். சாலை பணியாளருக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதியம் மாற்றம் ரூ5,200,  ரூ20,200, ரூ1900 வழங்க வேண்டும். 


சாலை பணியாளர்களுக்காக ஊதியத்தில் 10% ஆபத்துபடி வழங்க வேண்டும். நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் சீருடை சலவை படி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாதுரை, மாணிக்கம், குணசேகரன், சதிஷ், சிங்கராயன், தமிழ்செல்வன், மூர்த்தி உள்ளிடோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad