பின்னர் அச்சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் ஏ.ராதிகா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இரண்டுநாள்நடைபெறுகிறது.இந்த மாநிலக்குழு கூட்டத்தில் விவாதித்து பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளோம்.மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மீதான பொருளாதார தாக்குதல் நடந்துவருகிறது.சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடந்துவருகிறது தமிழகத்தில் பெண்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்து இருக்கக்ககூடிய மிக மோசமான சம்பவம் மாணவிகளை இளம்பெண்களை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உளுந்தூர் பேட்டை விகேசி கார்டனில் உள்ள ஸ்ரீராம் நகரில் ஒரு வீட்டில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து கடந்த ஆறுமாத காலமாக இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் பாலியல் வணிகம் செய்து வந்துள்ளனர்.அழகு கலை நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 16 பெண்களை மீட்டுள்ளனர் 17 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உரிய நேரத்தில் காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வில்லை என பல்வேறு தரப்பில் விமர்சனம் வந்துள்ளது.பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நடந்துவரும் சூழலில் கள்ளக்குறிச்சி சம்பவம் காவல்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உண்மை அறியும் குழு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நேரில் விசாரணை செய்தனர்.இந்த உண்மை அறியும் குழு வழக்கறிஞர் நிர்மலா ராணி தலைமையில் சமூக சேவகர்கள் என்ஜிஓ கலந்துகொண்டனர்.இந்த உண்மை அறியும் குழு அந்த மாவட்ட ஆட்சியர் எஸ்பி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.இந்த குழு சில பரிந்துரைகள் முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக பெண்கள்குழந்தைகள் மீதான வன்முறை பாலியல் குற்றங்கள் நடக்கும் பொழுது காவல்துறை எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். எப்படி எல்லாம் காவல்துறை நடந்து கொள்ளக்கூடாது என்ற பரிந்துரைகளை இன்று சிறுபுத்தகமாக வெளியிட்டுள்ளோம்.இந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கும் அனுப்ப உள்ளோம்.என தெரிவித்தார்.
மேலும் இந்த அறிக்கையில் சமீபத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சமீபத்தில் அதிகரித்துள்ளது என்ற விபரத்தை குறிப்பிட்டுள்ளோம். பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டியுள்ளது. விளம்பரங்கள் செய்யவேண்டும் இதை எல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
ஐடிபிஏ சட்டம் உள்ளது.இந்த சட்டத்தில் தண்டனைகள் உள்ளது இந்த சட்டத்தை முறையாக காவல்துறை பயன்படுத்துவதில்லை தருமபுரி திருநெல்வேலி மாவட்டங்களில் கருக்கலைப்பு இளம்வயது திருமணம் அதிக அளவில் நடந்துவருகிறது இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் ஆய்வு நடத்தி தமிழக அரசுக்கு முடிவுகளை பரிந்துரைக்க உள்ளோம் மேலும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்து போராட்டத்தின் மூலம் நாங்கள் தெரிவிப்போம், என கூறினார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரும் முன்னாள் கேரள மாநில அமைச்சருமான ஸ்ரீமதி அளித்த பேட்டியில் : இந்தியாவில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் தமிழ்நாட்டில் 7 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.தமிழ்நாட்டில் போர்குணமிக்க வளுவான அமைப்பாக மாதர்சங்கம் உள்ளது.
பிஜேபி ஆட்சியில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை,பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பணியிடங்களில் பாலின பாகுபாடு உள்ளது பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.பிஜேபிக்கு பெண்கள் மீதான சமூக அந்தஸ்து குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் மீதான வன்முறை பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது.
பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு காங்கிரஸ் ஆட்சியிலும் நிறைவேறவில்லை, பிஜேபி ஆட்சியிலும் நிறைவேற வில்லை, பிஜேபி ஆட்சி காலத்தில் சுஸ்மா சுவராஜ், பிருந்தா காரத் ஆகியோர் இருந்த காலங்களில் ராஜசபாவில் நிறைவேற்றப்பட்டு லோக்சபாவில் நிறைவேறவில்லை, தற்போது பிஜேபி அரசு தொகுதிகள் மறுசீரமைப்பு முடித்த பின் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதாக காரணம் சொல்கின்றனர். பிஜேபி அரசு பட்ஜெட்டில் ஏழைகள் மீது வரி ஏய்ப்பு பெண்கள்முன்னேற்றத்திற்கு உரிய நிதி ஒதுக்கவில்லை கார்பரேட்களுக்கான அரசாக உள்ளது, என குற்றம் சாட்டினார்.
இந்நிகழச்சியின்போது அகில இந்திய துணைத்தலைவர் பி.சுகந்தி மாநில தலைவர் எஸ்.வாலண்டினா பொருளாளர் ஜி.பிரமிளா, வழக்கறிஞர் நிர்மலா ராணி தருமபுரி மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா மாவட்ட தலைவர் ஏ.ஜெயா பொருளாளர் எம்.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக