தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, உத்தரவின் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி உள்ளிட்ட குழுவினர் கடத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடத்தூர் பேருந்து நிலைய பகுதி, தர்மபுரி பொம்மிடி ரோடு, அரூர் ரோடு, புட்டி ரெட்டிபட்டி, தாள நத்தம், அய்யம்பட்டி பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள், பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்கின்றனரா என திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் தா.அய்யம்பட்டி பகுதியில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், வி1, விமல் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சுமார் 2 கிலோ அளவிலானது கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. நியமன அலுவலர் அவர்கள் உத்தரவின் படி மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளருக்கு உடனடி அபராதம் ரூபாய்.25000 விதித்து மேற்படி கடை இயங்க தடை விதித்து கடையை மூடச் செய்தனர்.
உடன் அபராதம் செலுத்திடவும் 15 தினங்களுக்கு கடை திறக்கக் கூடாது என எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதோ பதுக்குவதோ சட்டப்படி குற்றம் எனவும், புகார் செய்ய 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்க விழிப்புணர்வு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக