தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மற்றும் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் உத்தரவிட்டதன் பேரில் , உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் பாலக்கோடு கோட்டை தெருவில் உள்ள ஒரு மளிகை கடையிலும், தர்மபுரி மெயின் ரோடு போக்குவரத்து பணிமனை அருகில் ஒரு பெட்டி கடை என இரண்டு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகுல் முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்பானுசுஜாதா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 2 கடைகளில் ஏற்கனவே ஒரு முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் மறுபடியும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை விற்பனையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய்அபராதமும், ஒரு மாதம் கடை இயங்க தடையும், முதல் முறையாக பிடிபட்ட பெட்டி கடை விற்பனையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்தும் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம், தலைமை காவலர் புவனா ஆகியோர் இணைந்து மேற்படி இரண்டு கடைகளுக்கும் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி உடன் அபராதம் செலுத்திடவும், மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூடி சீல் வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக