NCVT தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

NCVT தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு அறிவிப்பு.


2025 –ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி  குழுமத்தால் (NCVT)  நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக  (Private Candidates)  கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து  தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodel Govt. ITI) முதல்வரிடம் சமர்பிக்க வேண்டும்.


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory)  தேர்வு 15.10.2024 அன்றும் மற்றும் செய்முறை (Practical)  தேர்வு 16.10.2024 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.


இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 18.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad