தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தூய்மை காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுரு தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது, அதன் ஒரு பகுதியாக தூய்மையே சேவை திட்டத்தின் மூலம் தூய்மை காவலர்களுக்கு நடைப்பெற்ற மருத்துவ முகாமில் காது, மூக்கு, தொண்டை, கால்மூட்டு, இருதய சிகிச்சை, கண் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், மேலும் ரத்தப் பரிசோதனை, ரத்த உறைதல் பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்புப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறைபாடுகள் கண்டறியபடுபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் திரளான தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக