தருமபுரியில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் வருகின்ற 28.09.2024 அன்று நடைபெற உள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

தருமபுரியில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் வருகின்ற 28.09.2024 அன்று நடைபெற உள்ளது.


தருமபுரியில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் வருகின்ற 28.09.2024 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் 28.09.2024 அன்று காலை 7.00 மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்து தொடங்கப்படவுள்ளது.

01.01.2012க்கு பின்னர் பிறந்த 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15கி.மீ மாணவிகளுக்கு 10கி.மீ, 01.01.2010க்கு பின்னர் பிறந்த 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கி.மீ, மாணவிகளுக்கு 15கி.மீ, 01.01.2008க்கு பின்னர் பிறந்த 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கி.மீ, மாணவிகளுக்கு 15கி.மீ, தொலைவும் மிதிவண்டி போட்டி நடைபெறும்.


மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முறையே தலா ரூ.5000/-, ரூ.3000.00/, ரூ.2000.00/-, 4 முதல் 10 இடங்களைப் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூ.250/- வீதம் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது. மேலும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


மாவட்ட அளவிலான போட்டியில் சாதாரண கைப்பிடி (ஹேண்டில் பார்) கொண்ட, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பொருத்தாத, இந்தியாவில் தயாரான மிதிவண்டியை மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 13, 15, மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad