தர்மபுரி மாவட்டம் புலிகரை அருகே கோவிலூரில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீ குந்திஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனிக்கிழமைகளிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பாடு நடத்துவது வழக்கம்.
இதையடுத்து இன்று அதிகாலை முதலே ஶ்ரீ குந்தியம்மன் மற்றும் ஶ்ரீ சீனிவாசபெருமாள் சாமிக்கு பால் இளநீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் மற்றும் ஆராதனையும் அதனை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ குந்தியம்மனுக்கும் ஶ்ரீ சீனிவாச பெருமாள் சுவாமிக்கும் மகாதீபாரதனை காட்டப்பட்டது.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக