அமானி மல்லாபுரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 செப்டம்பர், 2024

அமானி மல்லாபுரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தில்  ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ஸ்வச்சபாரத்  திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் உள்ள  பொதுஇடங்கள்,  வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என  பிரித்து வழங்குதல்  ஆகியன குறித்து  விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதனை தொடர்ந்து இன்று அமானிமல்லாபுரம் ஊராட்சியில் உள்ள அமானிமல்லாபுரம் பகுதியில்  ஸ்வச்ச பாரத் திட்டத்தின் கீழ்  தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், முன்னிலை வகித்தார். இதில் எனது  கிராமத்தை நான்  தூய்மையாக வைத்துக் கொள்வேன் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற  துணைத் தலைவர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், வார்டு உறுப்பினர்கள்,  ஊராட்சி செயலாளர் பெருமாள், வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, சுகாதார ஊக்குநர், மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் திராளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad