பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், இன்று தூய்மை பாரத விழிப்புணர்வு கையெ ழுத்து துவக்க நிகழ்ச்சி நடந்தது. . பிளக்ஸ் பேனரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா. சுருளிநாதன் ஆகியோர் முதல் கையெழுத்திட்டனர். இதில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தனியாக பிரித்து வழங்குதல், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல், பசுமையான தூய்மை கிராமங்கள் உருவாக்குதல், குடிநீர் மேலாண்மை மேம்படுத்துதல், குழந்தைகள் மற்றும் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தூய்மை பாரத விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.
சிறந்த கிராம ஊராட்சியாக தேர்வு செய்தல் என்பன உள்ளிட்ட சேவைகள் பெற தூய்மை காவலா்கள் மூலம் முழுமையாக ஈடுபடுத்தி தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக /பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக