கடத்தூர் அருகே ஆலமரத்துபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலம். கோயில் கும்பாபிஷேக விழாவை எடுத்து தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட மணியம்பாடி ஊராட்சி ஆலமரத்தப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை அடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் இன்று காலை 11மணிக்கு காத்தாங்குளத்திலிருந்து தீர்த்த குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக பொய்கால் குதிரை, சாமிவேடம் அணிந்து தாரதப் பட்டை வாத்தியத்துடன். வெகுவிமர்சியாக நடைபெற்றது இந்த தீர்த்தக் கூட ஊர்வலத்தில் கங்கணம் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர், ஊர்வலத்தை பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவி யசோதா மதிவாணன் உள்ளிட்ட பல நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக