மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் – 2.O” (Tobacco Free Youth Campaign 2.O) –முன்னிட்டு, புகையிலையினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.09.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் – 2.O” (Tobacco Free Youth Campaign 2.O) விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் இன்று (24.09.2024) முதல் 23.11.2024 வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மருதநெல்லி பாலிடெக்னிக் கல்லூரியை சார்ந்த 200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற புகையிலை தீமை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார்.
இப்பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடங்கி பாரதிபுரம் வரை சென்றடைந்து. இப்பேரணியில் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாசக பதாகைகளுடன் கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சர்வதேச சைகை மொழி தினம் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான தினத்தை முன்னிட்டு, சைகைமொழி விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இலக்கியம்பட்டி செந்தில் நகர் பஸ் நிலையம் வரை சென்றடைந்தது.
இப்பேரணியில் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அiமைப்பை சார்ந்தவர்கள் மற்றும் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வுகளின் போது, துணை இயக்குநர் (சுகாதரம்) மரு.ஜெயந்தி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக