தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் முனைவர் தீர்த்தலிங்கம் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வஅன்பரசன் முன்னிலை வகித்தார்.
இதில் மாணவ-மாணவிகள் குழுவாக இனைந்து பழக்கடை, தேநீர் கடை, பானிபூரி கடை, உள்ளிட்ட உணவு பொருட்கள் கடைகள் அமைத்து வியாபாரம், செய்து இலாபம் ஈட்டி இலாப பணத்தை குழு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்களும், பேராசிரியர்களும் திரளாக கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல், வணிக நிர்வாகவியல், ஊட்டசத்து மற்றும் உணவு கட்டுப்பாடு, பொருளியல் துறை மற்றும் பாலக்கோடு PSS BAJAJ நிறுவனம் ஆகியோர் இனைந்து செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக