பாலக்கோடு டிரிபிள் ஸ்டார் ஸ்ரீ ஸ்ரீ சித்து விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 ஆயிரம் நபருக்கு சிறப்பு அன்னதானம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

பாலக்கோடு டிரிபிள் ஸ்டார் ஸ்ரீ ஸ்ரீ சித்து விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 ஆயிரம் நபருக்கு சிறப்பு அன்னதானம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் டிரிபிள் ஸ்டார் ஸ்ரீ ஶ்ரீ சித்து விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4-ம் நாள் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 11ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் நபர்களுக்கு  சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 5  நாட்கள் வரை சிறப்பு யாகங்கள் செய்து பூஜைகள் நடைபெற்றும் எனவும் 5ம் நாள் நாளை புதன்க்கிழமை   சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பாலக்கோட்டின் முக்கிய வீதி வழியாக மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஒகேனக்கல் ஆற்றில் கரைக்கப்படும் எனவும் அது சமயம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும்  டிரிபிள் ஸ்டார் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad