மொரப்பூர் பெரியார் நகரில் விசிகவின்மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

மொரப்பூர் பெரியார் நகரில் விசிகவின்மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


 தருமபுரி கிழக்கு மாவட்டம் மொரப்பூர் வடக்கு ஒன்றியம்  பெரியார் நகரில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு சிறப்பு  செயற்க்குழு கூட்டம் மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வை.திருலோகன் தலைமையில் நடைப்பெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கலந்து கொண்டு.மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அக்-2ல் நடைபெறகிறது, இம்மாநாட்டிற்கு மொரப்பூர் வடக்கு ஒன்றியத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்றவேண்டும் செப் 18 ல் சேலத்தில் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் மண்டல சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து.கொள்ள வேண்டும் என கூறினார்.


இந்நிகழ்ச்சியில்   மண்டல துனை செயலாளர் மின்னல்சக்தி, அரூர் தொகுதி துனை செயலாளர் பெ.கேசவன் மொரப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயசுதாதருமன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தருமன் தொகுதி துணை செயலாளர் ராஜாராம் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சாக்கம்மாள்  மாவட்ட துனை செயலாளர் மாகராணி, ஞானசுடர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை தொகுதி அமைப்பாளர் இரா. திருமலை, மின்வாரிய ஊழியர்களின் மாவட்ட செயலாளர்  அருள்மணி, பெருமாள், வெங்கடேசன், சோலை. ஆதிமூலம், சுகம்  புகழேந்தி, சிவாநிதி, ஜெயராஜ், பெரியார் நகர் முகாம்செயலாளர் ராஜசேகர், பொருளாளர் மணிகண்டன், தீத்தான் ஆசிரியர் பெப்சிபிரபு, சி. பி. ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad