மொரப்பூரில் விசிக செயற்குழு கூட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 செப்டம்பர், 2024

மொரப்பூரில் விசிக செயற்குழு கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் வை.திருலோகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார் இதில் 18ம் தேதி சேலத்தில் நடைபெறும் மண்டல குழு கூட்டத்திற்கு  அதிகளவில் பங்கேற்பது அக்-2ல் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதைபொருள் ஒழிப்பு மாநாட்டில் மொரப்பூர் வடக்கு ஒன்றியத்தில்  அதிகளவில் கலந்து கொள்வது மாநாட்டின் துண்டறிக்கை வீடுகள் தோறும் விநியோகித்து மகளிரணியினரை திரட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயசுதாதருமன் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை கைலாசம் சிவக்குமார் தங்கராஜ் பெப்சிபிரபு மின்வாரிய ஊழியர்கள் அருள்மணி கலைநாதன் தீத்தான் முகாம் நிர்வாகிகள்  கதிரவன் பிரபு அருள் அகிலன் மணிகண்டன் விக்கிரமாதித்யன் ராஜசேகர்  டாஸ்மாக் குமார் சேட்டு கோபிநாத் திலக்குமார் சி.பி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad