தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி நகர் 15வது வார்டு இரயில்வே நிலையம் முன்பு ஸ்ரீவீர கணபதி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் டி.நகர் பாய்ஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3ம் நாள் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 5 நாட்கள் புதன்கிழமை வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் வரும் 11ம் தேதி புதன்கிழமை 5ம் நாள் சிறப்பு பூஜை மறறும் அலங்காரம் செய்யப்பட்டு பாலக்கோட்டின் முக்கிய வீதி வழியாக மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஒகேனக்கல் ஆற்றில் கரைக்கப்படும் எனவும் அது சமயம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வீர கணபதி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் டி.நகர் பாய்ஸ் குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக