உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பான முறையில் கொண்டாட்டப்பட்டு வருவதை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடி விநாயகர் உருவ சிலை அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சட்ட தூண்கள் அமைப்பு மாவட்ட தலைவர் பி.கே.சிவா தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும் எனவும் அது சமயம் பொதுமக்கள் அனைவரும் விநாயகர் சாமிக்கு வழிபாடுகள் செய்யலாம் என்று விழா குழுவினர் தெரிவித்தனர். இதில் மா ஒன்றிய தலைவர் குமார் மற்றும் சட்ட தூண் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக