தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. முனைவர் கார்த்திகேயன் துறை தலைவர், மேலாண்மை துறை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு தலைமை உரை நிகழ்த்தினார்.
திரு.புவனேஷ் குமார் தலைவர் NHRD Housur Chapter மற்றும் திரு.ராஜேஷ் குமார், துணை மேலாளர் யுனோ மிண்டா குழுமம் சிறப்பு சொற்பொழிவு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர் இறுதியாக முனைவர் முகமத் நாபி நன்றியுரை வழங்கினார், நிகழ்வை இரண்டாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக