தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த இளம்பெண் அருணா (வயது.27) இவர் நேற்று இரவு 8 மணிக்கு பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து காவேரிப்பட்டிணத்திற்க்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். நடத்துனரிடம் டிக்கெட் வாங்க 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
நடத்துநர் டிக்கெட்டும் தரவில்லை மீதி சில்லறையும் தரவில்லை, டீசல் நிரப்பி கொண்டு செல்வதாக கூறி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்றது, ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர், டீசல் நிரப்பி கொண்டு நீண்ட நேரமாக வண்டி பெட்ரோல் பங்கிலேயே 2 மணி நேரம் நின்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்து ஏன் புறப்படவில்லை என கேட்டனர்.
அதற்கு பேருந்து நடத்துனர் பேருந்து செல்லாது நீங்கள் வேறு பேருந்தில் செல்லுங்கள் என கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் அருணா பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள பாலக்கோடு ஓசூர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார் இளம் பெண்னை அழைத்து சமாதனம் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக