மொரப்பூர் பகுதியில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

மொரப்பூர் பகுதியில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


மொரப்பூர் வட்டார மருத்துவ ஆலோசகர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார்.பெண்கள் மேம்பாட்டு சங்கம் சீனிவாசன், கவிதாஸ்,நவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை கம்பைநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வடமலை முருகன், செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள். ஆய்வக நுட்பினர் நவீன் குமார் மற்றும் கூடு இணைப்பு பணியாளர் திட்டம் பழனியம்மாள், சந்திரிகா, மகா, ஜனதா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு கலைக்குழுவினர் மயிலாட்டம், ஒயிலாட்டம்,கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். 


தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதேபோல் மொரப்பூர்,நவலை, தாசிரஹள்ளி ஆகிய பகுதிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad