சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே சிடுவம்பட்டி, புளியமரத்தூர் கிராமத்தில் காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு புளியமரத்தூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்மலர் தலைமை வகித்தார்.

வார்டு நம்பர் உறுப்பினர் நாகராஜ், முன்னாள் வார்டு நம்பர் உறுப்பினர் தங்கராஜ், சத்துணவு அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற நா.நாகராஜ் வரவேற்று பேசினார். அறக்கட்டளை நிர்வாகிகள் இயற்கை முத்துக்குமார், வைரம், கிருஷ்ணன், ரகுராமன், குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.பழனி பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.


அப்போது பேசுகையில் இயற்கை வளத்தை பாதுகாப்பது நமது கடமை. இன்றைய சூழலில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது இதனால் சுற்றுச் சூழல் மாசடைந்து வருகிறது.இதை தவிர்க்க ஒரே வழி இயற்கையை பாதுகாக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் இவ்வாறு மரத்தின் மரத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.


நிறைவாக கல்லூரி மாணவி ஜனனி நன்றி கூறினார். மாணவி நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்வில்  100 பேருக்கு இலவசமாக கனி பூ தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏராளமான ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad