தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி குமார் (வயது.45) இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தையுடன் தர்மபுரிக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்க்கு செல்வதற்காக சீரியம்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
பாலக்கோடு அடுத்த கடமடை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த மொபட் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்திற்குள்ளானது, இதில் குமார் பலத்த காயமடைந்தார்.
மனைவி மற்றும் குழந்தைக்கு அதிர்ஷ்வசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து குமார் பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக