மகேந்திரமங்கலம் அருகே பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரி கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

மகேந்திரமங்கலம் அருகே பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரி கைது.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த ரேசன்பட்டி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்  ஏற்கனவே திருமனம் ஆனவர், இவர் கட்டிட கூலி தொழிலாளியாவர், அதே பகுதியை சேர்ந்த 39 வயதான கட்டிட மேஸ்திரியுடன்  கட்டிட வேலை செய்ய சென்றார்.

கடந்த மார்ச் மாதம் ரேசன்பட்டி பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது கட்டிட மேஸ்திரி  கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளார், இதனால் இளம் பெண்  தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அவர் மார்ச் மாதம்  பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,


புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கட்டிட மேஸ்திரியை  தேடி வந்த நிலையில் போலீசார் கட்டிட மேஸ்திரியை செப்டம்பர் 1 ம் தேதி கைது செய்து விசாரித்ததில்  பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என தெரிய வந்தது, அதனை தொடர்ந்து மகளிர் போலீசார் கட்டிட மேஸ்திரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். சித்தாள் வேலைக்கு வந்த இளம் பெண்னை கட்டிட மேஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad