பல நூறு ஆண்டு காலமாக சுடுகாடுக்கு வழித்தடம் இல்லாமல் தவித்து வந்த கிராம மக்கள்; அரசு முன் வராததால் கிராம மக்களே சாலை அமைத்த அவலநிலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

பல நூறு ஆண்டு காலமாக சுடுகாடுக்கு வழித்தடம் இல்லாமல் தவித்து வந்த கிராம மக்கள்; அரசு முன் வராததால் கிராம மக்களே சாலை அமைத்த அவலநிலை.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிழக்குக்கள்ளிபுரம் கிராமம் இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பல நூறு ஆண்டு காலமாக சுடுகாட்டிற்கு வழித்தடமே இல்லை இந்த ஊரில் இறப்பு ஏற்பட்டு விட்டால் அந்த உடலை எடுத்துக்கொண்டு விவசாய நிலங்களில் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது குறிப்பாக மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி நெல், ராகி, கம்பு உள்ளிட்ட வயில்களில் இறங்கி எடுத்துச் செல்ல வேண்டிய   சிரமத்திற்கு உள்ளாகின்றனர் கிழக்கு கல்லிபுரம் பொதுமக்கள். 


மூன்று தலைமுறையாக தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம்  பலமுறை மனு அளிக்கப்பட்டது. இதே போல் ஆளுகின்ற அமைச்சர்களிடம் மனு அளித்தும் முதலமைச்சரின் தனிப்பிரிவு பல்வேறுமுறை மனுக்கள் அனுப்பியும் பென்னாகரம் வட்டாட்சியர் இடமும் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கப்படவில்லை. கிழக்குகள்ளிபுரம் கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுடுகாடுக்கு செல்லும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அனைத்து விவசாயிகளும் வழித்தடத்திற்கு தங்களது விவசாய நிலத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.


இதன் அடிப்படையில் இன்று கிராமத்து பொது மக்கள் வீடு வீடாக பணம் வசுலித்து ஜேசிபி இயந்திரம் மூலம் தாங்களாகவே சுடுகாடிற்க்கு மண் சாலை அமைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad