நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், நகர செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பிணர் ஆ.மணி கலந்து கொண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று தந்து வெற்றி பெற செய்த தொண்டர்களும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் தூள் செட்டி ஏரிக்கு விரைவாக தண்ணீர் கொண்டு வர வேண்டும் எனவும், மாரண்டஅள்ளி பேருராட்சியை தலைமை இடமாக கொண்டு மாரண்டஅள்ளி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும், அதனை தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து பேசியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும், பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமைக் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கிராம புற வளர்ச்சிக்கான நல திட்டங்கள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். என பேசியவர், வருகின்ற உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பெருவாரியான வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் முருகன், பொருளாளர் துரை, ஒன்றியதுணை செயலாளர்கள் சண்முகம், அண்ணாமலை, சரிதாகுமார், மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், முத்துராஜ், வெங்கடாஜலம், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட், நிர்வாகிகள் மாணவர்அணி சந்தர், சாமனூர்மணிவண்ணன், சிவக்குமார், தர்மன், புதுர் பழனிசாமி, கவுன்சிலர்கள் ராஜா, நாகராஜ் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக