தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியினை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் செப்டம்பர், 2, திங்கட்கிழமை, ஆய்வு செய்தார். ஆய்வின் போது அரசு சமுதாய கூடத்தில் இயங்கி வரும் ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் உள்ள கழிவறை மற்றும் உணவு தயாரிப்பு கூடம், பதிவேடுகள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என ஆய்வு செய்தவர், விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் அடிப்படை தேவைகள் குறித்து கலெக்டர் சாந்தியுடன் ஆலோசனை மேற்கொண்டார்,
அதனை தொடர்ந்து ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் பயனடையும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மாணவிகள் விடுதி கட்ட வேண்டும் என காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் BCR மனோகரன் கோரிக்கை மனு அளித்தார், மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய மாணவிகள் விடுதி கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், அன்பழகன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் ரமேஷ், ஊராட்சித் தலைவர் கெளரி திருக்குமரன் அட்மா தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக