குத்தகை அடிப்படையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு நிலம் ஒதுக்க வேண்டும் - சமூக சமத்துவபடை நிறுவனர் சிவகாமி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

குத்தகை அடிப்படையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு நிலம் ஒதுக்க வேண்டும் - சமூக சமத்துவபடை நிறுவனர் சிவகாமி.

விவசாயம் சார்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் நில ஒதுக்க வேண்டும் என சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவனர் சிவகாமி கூறினார், தர்மபுரி மாவட்டம் அரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக சமத்துவ படை கட்சி சார்பில் பஞ்சமி நில மீட்பு பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சா.புத்தமணி தலைமை வகித்தார் இதில் சமூக சமத்துவபடை நிறுவனர் சிவகாமி  கலந்துகொண்டு நிருபர்களிடம் கூறுகையில் கடந்த 2006 இல் திமுக அரசு ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் இலவசமாக நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது அதன்படி தமிழக முழுவதும் 2007 ஆம் ஆண்டு வரை 2 லட்சம் ஏக்கர்  ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது இத்திட்டம் ஒரே ஆண்டில் கிடப்பில் போடப்பட்டது.


இதற்கு போதுமான நிலம் இல்லை என காரணம் கூறப்பட்டது போதுமான நிலம் இல்லாத போது எப்படி ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்  அறிவிப்பு செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது சிலர் 50, 500 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர் 1972ல் இயற்றப்பட்ட நில சீர்திருத்த சட்டப்படி அதை திருத்தி ஒரு குடும்பம் பதினைந்து ஏக்கர் நிலம்  வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நில வழங்க முடியும் தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கிய வேண்டுகோளான  பஞ்சமி நிலம் மீட்பு என்பது இன்றுவரை சாத்தியமில்லாததாக இருக்கிறது விவசாயம் சார்ந்த மகளிர் சுய உதவி குழுவிற்கு நீண்ட கால குத்தகை  அடிப்படையில் நிலம் ஒதுக்க வேண்டும் என கூறினார்.


இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் மு.ராஜேஸ்வரிபிரியா அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகைக்காரர் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் த.இரா.கவியரசு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேந்திரன் கீரைபிரபாகரன் தீர்த்தமலை பாபா அறக்கட்டளை நிறுவனர் ஜி.மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad