திமுக அரூர் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் பங்கேற்பு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

திமுக அரூர் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் பங்கேற்பு

திராவிட முன்னேற்ற கழகத்தின் அரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அரூரில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.வேடம்மள் அனைவரையும் வரவேற்றார், அவை தலைவர் சாமிக்கண்ணு தலைமை வகித்தார்.


திமுக மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், மாவட்ட கலை இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சி.தேசிங்குராசன், அயலக அணி அமைப்பாளர் சரவணன், இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி ஆகியோர்  கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் எவ்வாறு  பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில்   மாநில தீர்மான குழு செயலாளர் கீரைவிஸ்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கலைவாணி வாசுதேவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.சந்திரமோகன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் எம்.குள்ளு, ப.செந்தாமரைகண்ணன், என்.சந்திரா பொருலாளர் பி.ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் கே.மதியழகன், ஜே.பூசைக்காரன், பி.கருணாநிதி, முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு அணிகளின் நிர்வாகிகள் பொறியாளர் சென்னகிருஷ்ணன்,  கு.தமிழழகன், கோட்டிஸ்வரன், பாடகர்மணி, தேவராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad