அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் ஹேண்ட்பால் போட்டிகளில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக விளையாடி இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற கணிதத் துறை மாணவன் எஸ். சஞ்சய் அவர்களுக்கு தேசிய அளவிலே இரண்டாம் இடம் பெற்ற தகுதி சான்றிதழையும், சேலம் பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறையால் வழங்கப்பட்ட படிவம் -3 (FORM -III) சான்றிதழையும், இன்று 04-09-2024 கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் சதுரங்க போட்டிகள் 02-09-2024 மற்றும் 03-09-2024 ஆகிய இரு நாட்களில் சேலம் நெய்க்காரப்பட்டி ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி கணிதத் துறை முதலாம் ஆண்டு மாணவி K.C.கவியரசி சிறப்பான முறையில் விளையாடி மூன்றாம் இடத்தையும், மாணவர் பிரிவில் இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவன் J.M. சத்யன் ஆறாம் இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர்களுக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை கல்லூரி முதல்வர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
தர்மபுரி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 30-08-2024 அன்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. அதில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வீரர் வீராங்கனைகள் சிறப்பான முறையில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி N.ஜீவிதா - 400 மீட்டர் ஓட்டப்பட்டியிலேயே முதலிடமும், நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், தாவரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி டி ஷாலினி -1500 ஓட்டப் போட்டியில் முதலிடமும், வேதியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஓவியா -400 மீட்டர் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கான தகுதி சான்றிதழ், பதக்கம், கோப்பைகளை கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன், பேராசிரியர்கள் முனைவர் விஜயா தாமோதரன்,சாரதி, முனைவர் G.பிரபாகரன், முனைவர் ஆர். கிருபாகரன், முனைவர் அரங்கநாயகி, முனைவர் பிரசன்னா வெங்கடேசன், முனைவர் அசோக் குமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இருபால் பேராசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், CLP பணியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக