பாலக்கோடு குள்ளபெருமாள் தெருவில் கார்பெண்டரை கத்தியால் குத்திய கூலி தொழிலாளி கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

பாலக்கோடு குள்ளபெருமாள் தெருவில் கார்பெண்டரை கத்தியால் குத்திய கூலி தொழிலாளி கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு குள்ளப்பெருமாள் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது.49) இவர் கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.


கடந்த 2ம் தேதி இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார். வீட்டிற்க்கு அருகே சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த  முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் என்பவர், என்னைப் பற்றி ஊரில் உள்ளவர்களிடம் ஏன் தவறாக கூறுகிறாய்  என கூறி கண்ணத்தில்  அறைந்துள்ளார்.


மேலும் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானசேகரின் மார்பு பகுதியில் குத்தி விட்டு தப்பி சென்றார். ஞானசேகரின்  அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இது குறித்து ஞானசேகர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வத்தை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad