மொரப்பூர் அருகே உள்ள எம்.பள்ளிப்பட்டியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கிகாரம் பெற்ற விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி விழா என முப்பெறும் விழா அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விசிக-வின் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன் முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன் கலந்துகொண்டு டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் டாக்டர் அம்பேத்கர் தலைவர் தொல்.திருமாவளவன் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் படங்களை அலங்கரித்து தேர்இழுத்தனர். பின்னர் வான வேடிக்கையுடன் பெண்கள் உற்சாகமாக நடனமாடி மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக