தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் 2023-24ஆம் ஆண்டு 15-வது நிதிக்குழு மான்யத்திட்டத்தின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமுதாய கூடம் கட்டிடம் புனரமைத்தல் பணியினையும், 2022-23ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.274.00 இலட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைத்தல் பணிகளையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.223.50 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணான் குட்டை புனரமைத்தல் பணிகளையும், 6-வது நிதிக்குழு மான்யத்திட்டத்தின் கீழ் ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளையும், மேலும் நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.105.03 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகள் என மொத்தம் ரூ.719.53 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் திரு.செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக