தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் வினோத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'ஆங்கில இலக்கிய வரலாற்றின் சாராம்சம்: ஓர் பார்வை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரையில் ஆங்கில இலக்கியத்தில் உள்ள பல்வேறு சிறப்புகளைப் பற்றியும் வரலாற்றால் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக இவ்வாராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியரும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கிருத்திகா வரவேற்புரை வழங்கினார். இறுதியாக முதலாம் ஆண்டு முதுகலை மாணவி செல்வி. ஹேமலதா நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவி பூஜாஸ்ரீ தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் ஆராய்ச்சி மாணாக்கர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக