தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மரண்டஹள்ளியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, இங்கு சுமார் 600கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர், இந்த பள்ளியில் அமைந்துள்ள சுகாதார வளாகம், முறையாக பராமரிக்கப்படாமல், தண்ணீர் இன்றியும் உள்ளதால், மாணவிகள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இது குறித்து அப்பள்ளியின் மேலாண்மை குழு சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம் கடந்த வருடம் 3-11-2023 அன்று மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் கழிவறை கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு வந்து அம்மா அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
அம்மா அவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் வாட்ஸ் அப் மூலம் தெரிவித்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியை அவர்களிடம் ஏன் புகார் அதிகம்வருகிறது புகார் வராதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திநீர் உங்களின் நேரடி பார்வையில் மூன்று கழிவறைகளில் கற்கள் வைத்து அடைத்தது இன்றுவரை அதே நிலைமை தான் இருக்கிறது சுத்தம் செய்து கொடுக்கப்படவில்லை.
எந்த ஒரு கழிவறைகளிலும் முறையான பக்கெட் ஜக்கு இல்லை கழிவறைகளில் உள்ள பைப் லைனில் (டேப்) தண்ணீர் வருவதில்லை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் மாணவிகள் பயன்படுத்துவதற்கு கூடிய அவல நிலைதான் இன்று வரை நீடிக்கிறது ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்புமாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையிலே இன்று வரை நீடிக்கிறதுகடந்த வாரம் 24- 8 - 2024 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் வாஸ்ட்அப் செயலி மூலம் புகார் அளித்தோம் தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள தண்ணீர் தொட்டிகள் மட்டும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கழிவறைகள் சென்ற வருடம் முதல் இந்த வருடம் வரை அதே நிலை தான் இருக்கிறது பலமுறை பத்திரிகையாளர்கள் உதவியுடன் தங்களுக்கு தெரியப்படுத்தியும் whatsapp செயலி மூலம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை பள்ளியில் Ro. குடிநீர் இன்னும் வழங்கப்படவில்லை சுகாதாரமான கழிவறைகள் என்பதே கேள்விக்குறியாக தான் உள்ளது இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மூன்று மாணவிகள் 15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது பள்ளி மேலாண்மை குழு மூலம் தங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறோம் உடனடியாக அனைத்து கழிவுகளையும் சுத்தம் செய்யப்பட்டு பக்கெட், ஜக்கு வைக்கப்பட வேண்டும் தண்ணீர் குழாய்களில் (டேப்)தண்ணீர் வர ஏற்பாடு செய்து தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம், என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடியாக மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக