10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாமாண்டிலும், 12ம் வகுப்பு முடித்த அல்லது ஐடிஐ முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டிலும் உடனடியாக சேர்ந்து கொள்ளலாம் (Spot Admission). அதற்கான விண்ணப்பத்தை www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாகவும், உரிய ஆவணங்களுடன் நேரடியாக கல்லூரிக்கு சென்றும் பதிவேற்றம் செய்யலாம்.
இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணிப்பொறியில் ஆகிய 5 பாடப் பிரிவுகள் உள்ளன. நவீன ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள், மாணவ/ மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள், மிக மிக குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பு பெற்றுத்தருதல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இக்கல்லூரியில் உள்ளன.
முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டிற்கான விண்ணப்பிக்க மற்றும் மாணவர் சேர்க்கைகான கடைசி நாள் வரும் 06.09.2024 ஆகும். மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என கடத்தூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திருமதி.வேதபாக்கியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக