மாரண்டஅள்ளி அடுத்த பூமரத்துப் பள்ளம் கிராமத்தில் கல்லூரி மாணவி மாயம் கண்டுபிடித்து தரக்கோரி தந்தை மாரண்டஅள்ளி போலீசில் புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

மாரண்டஅள்ளி அடுத்த பூமரத்துப் பள்ளம் கிராமத்தில் கல்லூரி மாணவி மாயம் கண்டுபிடித்து தரக்கோரி தந்தை மாரண்டஅள்ளி போலீசில் புகார்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பூமரத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜ் (வயது.48) இவரது மகள் ஸ்ரீவைசியா (வயது.19), இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு டிப்ளமோ கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

கடந்த 29ம் தேதி மாலை ஜெராக்ஸ் எடுக்க செல்வதாக கூறி கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை நண்பர்கள் உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், மகளை கண்டுபிடித்து தரக்கோரி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஸ்ரீவைசியாவின் தந்தை தங்கராஜ்  கொடுத்த புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவைசியாவை  தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad