தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை கடத்தி செல்வதாக எஸ்.பி.மகேஸ்வரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், நேற்றிரவு காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் பறந்தனர்.
காரை துரத்தி சென்ற போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று அகரம் பிரிவு சாலையில் சினிமா பாணியில் காரை மடக்கி பிடித்தனர். காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி தலைமறைவாகினார்.
போலீசார் காரை சோதனை செய்ததில் கர்நாடகாவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1டன் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
குட்கா கடத்தி வந்த காரை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக